கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் மாதம் 798 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளது. தொழில்துறை இயந்திரங்கள், தங்க கட்டிகள் அதிகளவு புக்கிங்.!!!

விமான சேவைகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், செப்டம்பர் மாதம் உள்நாட்டுப் பிரிவில் 690 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளது. இதில், தொழில்துறை இயந்திரங்கள், தங்க கட்டிகள் அதிகளவு உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் மாதம் 798 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பிரிவில் தொழில்துறை இயந்திரங்கள், தங்க கட்டிகள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன, என்று விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, கோவை சர்வதேச விமான நிலையத்தில் மாதம்தோறும் ஆயிரம் டன் எடையிலான கார்கோ கையாளப்படும். இதில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில், 800 டன் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து பிரிவில் 200 டன் உள்ளடங்கும்.

இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று பரவலுக்குப் பின், விமானங்கள் இயக்கம் மற்றும் கார்கோ கையாளும் அளவு கணிசமாகப் பாதிக்கப்பட்டது. தற்போது, விமான சேவைகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கையும், கையாளப்படும் கார்கோ அளவும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இதுகுறித்து விமானநிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-

கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் மாதம் மட்டும், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 690 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 108 டன், என மொத்தம் 798 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், சர்வதேச போக்குவரத்து பிரிவில், அதே 108 டன் எடையிலான கார்கோ மட்டுமே கையாளப்பட்டுள்ளது. ஆனால், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் ஆகஸ்ட் மாதம் 566 டன் கார்கோ கையாளப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 690, என 124 டன் கார்கோ அதிக கையாளப்பட்டுள்ளது.

உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் வழக்கமாக அனுப்பப்படும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமன்றி, தற்போது தொழில்துறை சார்ந்த பல்வேறு இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் தங்க கட்டிகள், அதிக அளவு கையாளப்படுகின்றன. இதுவே, உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மாதம்தோறும், அதிக எடையிலான கார்கோ கையாளப்படுவதற்குக் காரணமாகும்.

சர்வதேச போக்குவரத்து பிரிவில் தற்போது ஷார்ஜாவுக்கு மட்டுமே கோவையிலிருந்து நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது.

இவ்வாறு, விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...