ஆனைமலை அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட சிறுவன் உட்பட 7 பேர் மீட்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில், கடந்த ஆறு மாதங்களாக திருப்பூர் மாவட்டம் கணியூர் கிராமத்தில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில், கடந்த ஆறு மாதங்களாக திருப்பூர் மாவட்டம் கணியூர் கிராமத்தில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்கள், அந்த செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூபாய் ஒரு லட்சம் முன் பணமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு குடும்பத்திற்கு வாரம் ரூ.1000 மட்டுமே சம்பளமாக வழங்கி, இவர்களை அந்த செங்கல் சூளை உரிமையாளர், கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டு, பிற இடங்களுக்கு பணிக்குச் சென்று வர விடாமல் தடுத்து வருவதாகவும், அவர்களுக்கு, போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருவதாக, கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஒரு புகார் வந்துள்ளது.

இதையடுத்து, புகாரை கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் கொத்தடிமைகள் மீட்பு இயக்க திட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, செங்கல் சூளையில் இன்று சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பின், அந்த செங்கல் சூளையில் 13 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மீட்டப்பட்டு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பாதிக்கப்பட்ட 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...