அமராவதி நகர் சைனிக் ராணுவப் பள்ளியில் முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை.!!!

சைனிக் ராணுவப் பள்ளியில் முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி நகரில் நடைப்பெற்றது.


திருப்பூர்: சைனிக் ராணுவப் பள்ளியில் முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி நகரில் நடைப்பெற்றது.

சைனிக் ராணுவப் பள்ளியில் முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி நகரில் சைனிக் ராணுவப் பயிற்சி பள்ளி அமைந்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி 1962-ஆம் ஆண்டுதுவக்கப்பட்டது. இப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர்.

இப்பள்ளியில் ராணுவ வீரக்களுக்கு வழங்கப்படும் அணிவகுப்பு பயிற்சி மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு மட்டுமே இப்பள்ளி அனுமதி அளித்துள்ளது.

நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இங்கு அனுமதி கிடையாது. இந்நிலையில் இப்பள்ளி வரலாற்றில் முதல்முறையாகக் கடந்த ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை துவங்கியது. கொராணா தாக்கம் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட காரணத்தால் மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்தனர்.

இந்நிலையில், பள்ளிகள் விரைவில் திறக்க உள்ளது.



எனவே முதல்முறையாக இப்பள்ளிக்குப் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவிகள் வருகை புரிந்தனர்.



இந்த மாணவிகளுக்கான தங்கும் விடுதி இன்று திறக்கப்பட்டது.



தமிழகத்தின் புகழ்பெற்ற வீரப்பெண் ராணி வேலுநாச்சியார் அவர்களின் பெயரைப் பெண்கள் விடுதியின் பெயராகச் சூட்டியுள்ளனர்.



இந்த விடுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியார் அவர்களது திருவுருவ புகைப்படத்தைப் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல்ரகு அவர்களின் மனைவி டாக்டர் ஆஷா நிர்மல் ரகு அவர்கள் திறந்து வைத்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...