உடுமலை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் துவக்கம்..!

இந்த கருவி மூலம் காற்றில் இருந்து 95.6 சதவீதம் தூய்மையான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, 60 முதல் 80 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியும்.


திருப்பூர்: உடுமலை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் துவங்கப்பட்டுள்ளது.

உடுமவை அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் பாரத பிரதமரின் பி.எம் கேர் திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி மதிப்பில் நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கருவி, மூலம் காற்றில் இருந்து 95.6 சதவீதம் தூய்மையான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, 60 முதல் 80 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியும். இந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை வருவாய் கோட்டாட்சியர் கீதா பங்கேற்று துவக்கி

வைத்தார்.



இந்த விழாவில் வட்டாட்சியர் ராமலிங்கம், தலைமை மருத்துவர் செல்வராஜ், மருத்துவர்கள், கவிதா, வனஜா, உமா மகேஸ்வரி, அரசு சித்த மருத்துவர் லட்சுமிபதிராஜ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...