எங்களை யாரும் தேட வேண்டாம்..!! கோவையில் பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு 2 பெண் பேராசிரியர்கள் மாயம்..!

கோவையில் 2 பெண் பேராசிரியர்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் 2 பெண் பேராசிரியர்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண், நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

அதே கல்லூரியில் திருப்பூர் பெருமாநல்லூர் ஊரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் ஒரே விடுதி அறையில் தங்கியிருந்தனர். ஒரு ஆண்டுகளாக இவர்கள் ஒரே கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கி இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், 25 வயது இளம்பெண் கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை அறிந்த அவரது தோழி தனது பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் வந்த இவர்கள் 2 பேரும் தன்னுடைய பெற்றோர்களுக்கு மெசேஜ் அனுப்பினர். எங்களை யாரும் தேட வேண்டாம், நான் எனது தோழியுடன் செல்கிறேன். இனி வரமாட்டேன் என தகவல் தெரிவித்து இருந்தனர்.

இதுதொடர்பாக இளம்பெண்களின் பெற்றோர்கள் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...