குவியும் ஆர்டர்கள்: தீபாவளி விடுமுறை அளிப்பதில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு சிக்கல்.!!!

வருகின்ற பண்டிகை காலங்கள் திருப்பூர் பின்னலாடை துறைக்கு சாதகமாக உள்ளது, தொழிலாளர்கள் நீண்ட விடுமுறையில் செல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.



திருப்பூர்: வருகின்ற பண்டிகை காலங்கள் திருப்பூர் பின்னலாடை துறைக்கு சாதகமாக உள்ளது, தொழிலாளர்கள் நீண்ட விடுமுறையில் செல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

பின்னலாடை நகரமான திருப்பூர் மாவட்டத்தில் வருடத்திற்கு 50-ஆயிரம் கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக அளவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தால் வர்த்தகம் பாதியாக சரிந்தது.

தற்போது இரண்டாவது அலையை கடந்து வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் பின்னலாடை துறை ஏறுமுகமாக பயணிக்க துவங்கியது. தொழில் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் வரக்கூடிய பண்டிகை காலங்களில் மீண்டும் பின்னலாடை துறை வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.

கடந்த இரண்டு கொரோனா அலைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் மூன்றாவது அலையையும் அச்சத்தை காட்டிவந்த சூழலில் பலர் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதால் மூன்றாவது ஆலை அச்சம் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

வருகின்ற பண்டிகை காலங்கள் பின்னலாடை துறைக்கு உறுதுணையாக உள்ளது, அதையொட்டி பல ஆர்டர்கள் வர இருக்கின்றனர் எனவே திருப்பூர் பின்னலாடை துறை பொருத்தவரை பண்டிகை காலங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நீண்ட நாட்கள் விடுமுறைக்கு செல்லும் பழக்கம் உள்ளது.

குறிப்பாக தீபாவளி, பொங்கல் என்றால் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாத காலம் வரை ஆட்கள் விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். ஆனால் இந்த தடவை தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் விடுமுறை விட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் கண்டைனர் பற்றாக்குறையும் நிலவி வரக்கூடிய சூழ்நிலையில், புதிய ஆடைகளை விரைவில் தயார் செய்து அனுப்ப வேண்டும் எனவே அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு விடுமுறையை தவிர்த்து வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டும்.

வங்கதேச தொழிலாளர்கள் அதிக அளவில் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர் நிறுவனங்களை பொறுத்தவரை நாங்கள் புதிதாக சேர்கின்ற ஆட்களின் ஆதார் கார்டு பார்த்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கிறோம், அது அசலா இல்லை போலியா என்பதை கண்டறிய தொழில் துறையினரிடம் தொழில்நுட்பம் இல்லை, வரும் காலத்தில் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...