ஊரடங்கிற்கு பிறகு மீண்டு வரும் திரைத்துறை..! தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு படங்களால் திரையரங்குகள் களைகட்டும் - திருப்பூர் சுப்ரமணியம்

தமிழக அரசு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தழிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திரைத்துறை மீண்டு வருவதாகவும் தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு படங்கள் வரும் போது பழையபடி திரையரங்குகள் களைகட்டும் என தழிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களாக திரையரங்குகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டதுடன் வசூலும் குறைவாக இருந்தது. இதனால் ஓடிடி தளங்களில் தான் இனி எதிர்காலம் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது புதிய படங்கள் வெளியான நிலையில் மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத துவங்கி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், இந்த வாரம் புதிதாக திரைக்கு வந்துள்ள சிவகுமாரின் சபதம், ருத்ர தாண்டவம் மற்றும் ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் நோ டைம் டூ டை என்ற மூன்று படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் திரையரங்குகள் முழுமையான 50 சதவீத நுழைவு இருப்பதாகவும், மக்கள் நல்ல படங்களை திரையரங்கில் பார்க்கவே விரும்புவதாக கூறினார்.

மேலும், தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு உள்ளிட்ட படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் பழைய உற்சாகம் திரும்பும் எனவும், தமிழக அரசு சரஸ்வதி பூஜை முதல் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...