கோவை பெ.நா.பாளையம் வனப்பகுதியில் உடும்பு வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது; இறந்த நிலையில் மூன்று உடும்புகள் பறிமுதல்

வனவர் K.முத்து தலைமையில், வனக்காப்பாளர்கள், எஸ்.சதீஷ்குமார் மற்றும் சி.தினேஷ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவினர், ரோந்துப் பணியின்போது, உடும்பு வேட்டையாடியதை கண்டுபிடித்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட் வனப்பகுதியில், உடும்பு வேட்டையாடிய இரண்டு நபர்கள் செய்யப்பட்டுள்ளனர். இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை வனக் கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட், தடாகம் காப்புக் காடு, கன்னிமார் கோவில் சராகப் பகுதியில், பிரிவு வனவர் K.முத்து தலைமையில், வனக்காப்பாளர்கள், எஸ்.சதீஷ்குமார் மற்றும் சி.தினேஷ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவினர், கடந்த 5 ஆம் தேதி மாலை 5.00 மணியளவில், வழக்கமான ரோந்துப் பணியின்போது, இரண்டு நபர்கள், உடும்பு (Monitor Lizard) வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

வேட்டையாடிய இருவரும் தப்பியோடி தலைமறைவாகி விட்ட நிலையில், வேட்டையாடிய மூன்று உடும்புகள் மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டன. தப்பியோடிய எதிரிகளைக் கண்டுபிடிக்க, தனிக் குழுக்கள் அமைத்து, தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், 06.10.2021ஆம் தேதி பிற்பகல், தப்பி ஓடிய நபர்கள் பிடிபட்டனர்.



விசாரணையில் இருவரும், பிளிச்சி கவுண்டனூர், காளம்பாளையம் - கிராமம், மேட்டுப்பாளையம் வட்டத்தை சேர்ந்த கே. இராஜேந்திரன் (41) மற்றும் கே.மணி (42) என்பது தெரியவந்தது. இருவரிடமும், பெ.நா.பாளையம் வனச்சரக அலுவலர், S.செல்வராஜ், விசாரணை மேற்கொண்டார்.



மேலும், வனப்பகுதியில் வேட்டையாடிய இடம் மற்றும் வெட்டுக் கத்தியை மறைத்து வைத்த இடம் ஆகியவற்றை அவர்கள் அடையாளம் காட்டி, வேட்டையாடிய குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டு, கோவை மாவட்ட வன அலுவலர் T.K.அசோக்குமார் IFS அவர்களது வழிகாட்டுதலின்படி, இன்று (07.10.2021) மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற நடுவர் உத்தரவின்படி, அவிநாசி கிளை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், வேட்டையாடப்பட்ட மூன்று உடும்புகள், நீதிமன்ற உத்தரவின்படி, கோவனூர் கால்நடை உதவி மருத்துவரால், உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மண்ணில் புதைக்க முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...