கோவையில் நட்சத்திர ஓட்டலில் டம்மி கைத்துப்பாக்கியுடன் கேரளா ஆசாமி கைது - போலீசார் தீவிர விசாரணை..!!

விசாரணையில், தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்றும் அவரிடமிருந்து இந்த துப்பாக்கி கிடைத்தது என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.


கோவை: கோவையில் நட்சத்திர ஓட்டலில் கைத்துப்பாக்கியுடன் தங்கியிருந்த கேரள ஜோதிடர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காட்டூர் உள்ள ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் உதவி ஆணையர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு ஓட்டலில் ஜோசி (52) என்பவர் தங்கியிருந்தார். அவர் ஜோதிடர் என்பது தெரியவந்தது. அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்.

இந்த நிலையில், அவரது உடமைகளை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சூட்கேசுக்குள் ஒரு கைத்துப்பாக்கியை பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கி உரிமம் பெறப்படவில்லை.

ஜெர்மன் நாட்டு தயாரிப்பான அந்த கைத்துப்பாக்கியால் சுட்டால் டப் என்று சத்தம் வரும் குண்டு பாயாது. ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் தொடங்கும்போது வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைக்க இந்த துப்பாக்கியை பயன்படுத்தப்படும்.

இதனிடையே, யாரையாவது மிரட்டுவதற்காக துப்பாக்கியை ஜோதிடர் வைத்திருந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்றும் அவரிடமிருந்து இந்த துப்பாக்கி கிடைத்தது என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...