கோவையில் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

மேலும், மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் மிகவும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளார்.



கோவை: கோவையில் பணிபுரிந்து வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட காரணத்தினால் அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறையில் தீவிர குற்றப் பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக தற்போது பணிபுரிந்து வரும் J.கலையரசி என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் மிகவும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளார்.

பின்னர், பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு பாதகமாக நடந்து கொண்டதால் கோயம்புத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவரின் ஆணைப்படி இன்று (7-ம் தேதி) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...