பொள்ளாச்சியில் போலீசாருக்கு பயந்து சாக்கடைக்குள் ஒளிந்து கொண்ட திருடன்..! தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மீட்பு..!!

போலீசார் விசாரணையில் அவர் சூளேஸ்வரன்பட்டி சேர்ந்த ஹக்கீம் என்பதும், பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


கோவை: பொள்ளாச்சியில் காவல்துறைக்கு பயந்து சாக்கடைக்குள் இறங்கி ஒளிந்து கொண்ட திருடனை தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உதவியோடு போலீசார் பிடித்தனர்.

பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் நேற்று இரவு மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த நபர் ஒருவர் காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் தானாக சாக்கடைக்குள் இறங்கிக் கொண்டார். இதை கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த நபரை வெளியே வரச் சொல்லி அழைத்தனர். ஆனால் அந்த நபர் சாக்கடைக்குள் நன்கு பதுங்கி கொண்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து சாக்கடைக்குள் பதுங்கி இருந்த நபரை வெளியே எடுத்தனர்.

பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூளேஸ்வரன்பட்டி சேர்ந்த ஹக்கீம் என்பதும், பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், நேற்றிரவு பிரதேஷ் என்பவரிடம் செல்போனை திருடிக்கொண்டு வரும் போது தன்னை காவல்துறையினர் சந்தேகிப்பதாக நினைத்து சாக்கடைக்குள் இறங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட ஹக்கீமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...