முதல் முறையாக, கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் 'லோக் அதாலத்' நடத்த திட்டம்: நிலுவை வழக்குகள் எண்ணிக்கை 1,200 கடந்ததால் நடவடிக்கை..!

கடந்த பல மாதங்களாக நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் பணியிடம் நிரப்பப்படாத காரணத்தால், வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 1,200 கடந்துவிட்டது.


கோவை: நுகர்வோர் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு தீர்ப்பு வழங்குவதில் நுகர்வோர் நீதிமன்றம் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவையில் நுகர்வோர் நீதிமன்றம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. ஒரு தலைவர் ( நீதிபதி), இரண்டு உறுப்பினர்கள் மற்றும் பத்து ஊழியர்களுடன் கட்டமைப்பு கொண்டு, இந்த நீதிமன்றமானது செயல்பட்டு வருகிறது.

நுகர்வோர் நீதிமன்றம்: நஷ்ட ஈடு மற்றும் வழக்குகள்

முன்பு, இந்த நீதிமன்றத்திற்கு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை மட்டுமே நஷ்ட ஈடு உத்தரவு வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், இந்த நீதிமன்றம் ஆணையமாக மாற்றப்பட்டதற்குப் பின், ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு தொகை வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கு, மாதந்தோறும் சராசரியாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், 30 முதல் 40 வழக்குகளுக்கு மாதம்தோறும் தீர்ப்பு வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், கடந்த பல மாதங்களாக நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் பணியிடம் நிரப்பப்படாத காரணத்தால் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 1,200 கடந்து விட்டது.

முதல் முறையாக 'லோக் அதாலத்'

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்படும் 'லோக் அதாலத்' போன்று கோவை நுகர்வோர் நீதிமன்ற வளாகத்திலும் முதல் முறையாக 'லோக் அதாலத்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் கோர்ட் வட்டாரங்கள் கூறுகையில், " நிலுவை வழக்குகள் அதிகம் உள்ள காரணத்தைக் கருத்தில் கொண்டு சட்டத்தில் வழிவகை உள்ளதால் முதல்முறையாக 'லோக் அதாலத்' அடுத்த மாதம் (நவம்பர்) முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடம் நிரப்பப்படுமா?

இருப்பினும், இரு தரப்பினரும் சமரசமாக தீர்வுகான முன்வந்தால் மட்டுமே 'லோக் அதாலத்' மூலம் பயன் கிடைக்கும். தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,200 க்கு மேல் உள்ளதால், நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்பட்டால் மட்டுமே, பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நுகர்வோர் கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...