ஈஷாவில்‌ நவராத்திரி விழா அக்‌.7-ம்‌ தேதி தொடக்கம்‌.!!

ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவியில்‌ நவராத்திரி திருவிழா அக்‌.7-ம்‌ தேதி முதல்‌ அக்‌.15-ம்‌ தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில்‌ கர்நாடக சங்கீதம்‌, பரத நாட்டியம்‌, வயலின்‌ இசை போன்ற நிகழ்ச்சிகள்‌ நடக்கும்‌.



கோவை: ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவியில்‌ நவராத்திரி திருவிழா அக்‌.7-ம்‌ தேதி முதல்‌ அக்‌.15-ம்‌ தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, அக்‌. 8, 9, 10, 12, 15 ஆகிய தினங்களில்‌ சம்ஸ்‌கிரிதி மாணவர்களின்‌ சிறப்பு கலை நிகழ்ச்சிகள்‌ லிங்க பைரவி யூ- டியூப்‌ சேனலில்‌ மாலை 6.45 மணிக்கு நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்‌. (https://www.youtube.com/c/LingaBhairavi). இதில்‌ கர்நாடக சங்கீதம்‌, பரத நாட்டியம்‌, வயலின்‌ இசை போன்ற நிகழ்ச்சிகள்‌ நடக்கும்‌.

இதுதவிர, அக்‌.9, 10, 15 ஆகிய தேதிகளில்‌ மாலை 5.30 மணிக்கு நடக்கும்‌ சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியைப் பார்வையிட https://isha.sadhguru.org/in/en/events/annual-events/navratri என்ற இணையதளத்துல்‌ முன்பதிவு செய்வது அவசியம்‌.

கொரோனா தொற்று சூழலை முன்னிட்டு அரசு விடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்‌ படி, திங்கள்‌ முதல்‌ வியாழன்‌ வரை காலை 10.30 மணி முதல்‌ மாலை 4.30 மணி வரை மட்டுமே ஈஷாவிற்குப் பக்தர்கள்‌ நேரில்‌ வருகை தர முடியும்‌. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில்‌ ஈஷாவிற்கு வர அனுமதி இல்லை.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...