கோவையிலிருந்து கேரளாவிற்குக் கடத்த முயன்ற 3650-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!!

கோவையிலிருந்து வாளையார் வழியாகக் கேரளாவிற்குக் கடத்த முயன்ற 3650-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவையிலிருந்து வாளையார் வழியாகக் கேரளாவிற்குக் கடத்த முயன்ற 3650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.

கோவையிலிருந்து வாளையார் வழியாக இன்று ஒரு வேன் மூலமாக 3-ஆயிரத்து 650-கிலோ ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற வேனை வாளையார் செக்போஸ்ட்டில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

முன்னுக்குப்பின் முரணான தகவல் அளிக்கவே போலீசார் டிரைவரை கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு குடிமைப்பொருள் குடோனில் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாவட்ட எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் மு.நி.காவலர் சதீஷ்குமார் ஆகியோர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த வேனையை சோதனை செய்த போது அதில் சட்டத்திற்கு விரோதமாக சுமார் 3650-கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

ரேஷன் அரிசி கடத்தி வந்த வேனை பறிமுதல் செய்தும் மற்றும் ஓட்டுனரை கைது செய்தும் நிலையம் அழைத்து வந்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...