கோவையில் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது.!!

கோவையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையயில், 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக முதியவர்களே இதில் சிக்கி வருகின்றனர்.

இதே போல் நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 66, கூலி தொழிலாளி.

நேற்று இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2-ம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று தனியாக வைத்து பாலியல் ரீதியாகத் தொல்லை தந்துள்ளார்.

சிறுமி அழுது கொண்டே சென்று தன்னுடைய பெற்றோரிடம் கூறினாள். இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. காவல்துறை சிறார் பாலியல் துன்புறுத்தல் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த குற்றவாளியைத் தேடி வந்தனர். இன்று பழனிச்சாமியைக் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...