நாட்டுக் கோழி பண்ணை நடத்தி ஒரு கோடியே 39-லட்சம் மோசடி உரிமையாளருக்கு 10- ஆண்டு சிறை தண்டனை 76-லட்சம் அபராதம் விதித்து கோவை டான் பிட்கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை: நாட்டுக் கோழி பண்ணை நடத்தி ஒரு கோடியே 39-லட்சம் மோசடி உரிமையாளருக்கு 10- ஆண்டு சிறை தண்டனை 76-லட்சம் அபராதம் விதித்து கோவை டான் பிட்கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஈமு கோழிப்பண்ணை நாட்டுக்கோழிப் பண்ணை திறப்பதாகக் கூறி ஈரோடு, பெருந்துறை, கோயம்புத்தூர், திருப்பூர், பகுதிகளில் அநேக கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்குக் கோவையில் முதலீட்டாளர் நலன் நீதிமன்றம் தொடர்ந்து இந்த மாதத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டு வருகிறது. இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜய மங்கலம் சரளையைச் சேர்ந்த பாஸ்கரன் மற்றும் கம்புளியாம்பட்டியைச் சேர்ந்த சேகர், குமார், ஆகியோர்கள் சரளையில் பாஸ் பவுல்ட்டரி பார்ம்ஸ் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து 1-லட்சம் முதலீடு செய்தால் நாட்டுக்கோழி கொடுத்தும் அதைப் பராமரிக்க மாதம் 8-ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும்,
வருட முடிவில் ஊக்கத்தொகையாக 8000-கொடுப்பதாகவும் நிறுவனத்தில் விஐபி திட்டத்தில் ரூபாய் 1-லட்சம் முதலீடு செய்தால் மாதம் 9000 ஊக்கத்தொகையாக வருட முடிவில் ஊக்கத் தொகையாக 9-ஆயிரம் கொடுப்பதாகவும் மூன்று வருட ஒப்பந்த முடிவில் முதலீட்டுத் தொகையைத் திருப்பி தருவதாகவும் பத்திரிகையில் விளம்பரம் செய்தனர்.
இதில் மொத்தம் 98-முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 1-கோடியே 38-லட்சத்து 98-ஆயிரத்து 500- வசூல் செய்தும் மேற்படி முதலீட்டாளர்களுக்குக் குறிப்பிட்ட தொகையைத் தராமல் அலுவலகத்தைப் பூட்டி விட்டு மேற்படி நபர்கள் தலைமறைவானார்கள்.
பொள்ளாச்சி ராஜ் நகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற எண் 1068 /2012 120b, 406, 420, இந்தியத் தண்டனை சட்டம் மற்றும் 5 of TNPID Act 1997 வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரவி இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
சேகர் என்பவருக்கு 10-ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் 76-லட்சம் அபராதம் விதித்தும், குமார் என்பவரை வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்புக் கூறப்பட்டது மேலும் இவ்வழக்கின் எதிரி சேகர் என்பவரைக் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.