பல்லடத்தில் கோவில் ஊழியரை தாக்கி பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்.!!

வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் கொரோனா ஊரடங்கு தடையை மீறி தடுப்புகளை உடைத்தெறிந்து கோவில் ஊழியரை தாக்கி பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள். கோவில் செயல் அலுவலர் புகரின் பேரில் பாஜக பிரமுகர் உள்பட 10-பேரிடம் மங்கலம் காவல்துறை விசாரணை.


திருப்பூர்: பல்லடம் நூற்றாண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் கொரோனா ஊரடங்கு தடையை மீறி தடுப்புகளை உடைத்தெறிந்து கோவில் ஊழியரை தாக்கி பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள். கோவில் செயல் அலுவலர் புகரின் பேரில் பாஜக பிரமுகர் உள்பட 10-பேரிடம் மங்கலம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த புகழ் பெற்ற அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரான மேனகா என்பவர் இருந்து வருகிறார்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் இந்துகளின் முக்கியமான நாளாக கருத்தப்படும் மகளாய அமாவாசை தினமான இன்றும் பக்தர்கள் கோவில்களில் கூடுவதற்கும் சுவாமி தரிசனம் மற்றும் தர்ப்பணம் நிகழ்ச்சிகளுக்கும் உயிர் கொல்லி கொரோனா தோற்று நோய் பரவலை காரணம் காட்டி தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் மகளாய அமாவாசை தினமான இன்று சோமனுர் அருகே உள்ள செரயாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்த சென்றுள்ளனர்.

இதனிடயே அரசின் உத்தரவை பின் பற்றும் வகையில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் சேர்வதைத் தடுக்கும் வகையிலும் கொரோனா நோய் தோற்று பரவாமல் இருக்க மூங்கில் தடுப்புகளைக் கோவில் நிர்வாகம் அமைத்து இருந்தது.

அப்போது அங்கு வந்த கோவை வடக்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன், பொங்கல் வைத்து வழிபட அனுமதி வழங்காத கோவில் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அதனை தொடர்ந்து சுவாமி தரிசனத்திற்குக் காத்திருந்த 4 குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு நுழைவு ரசீது கொடுக்கும் கோவில் ஊழியர் அழகர் சாமியைத் தள்ளிவிட்டுத் தடுப்பு கட்டைகளைப் பிடுங்கி வீசி எரிந்து விட்டு அரசு விதி முறைகளை மீறி கோவிலுக்குள் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கோவில் செயல் அலுவலர் மேனகா திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும், மங்கலம் காவல் நிலையத்திற்கும் புகார் தெரிவித்தார். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் மேனகா கொடுத்த புகாரின் பேரில் கோவை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன் மற்றும் நான்கு பக்தர்கள் குடும்பத்தினர் 10 பேரிடம் மங்கலம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக பிரமுகர் ஜெய்ஹிந்து முருகேசன் கூறுகையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மட்டும் தேவாலயங்களில் மசூதிகளில் தொழுகை மற்றும் பிரார்த்தனை நடத்த அனுமதிக்கும் நிலையில் இந்துக்களுக்கு மட்டும் ஆலய தரிசனம் செய்யத் தடை விதித்திருப்பது கண்டனத்திற்குரியது உடனடியாக அரசு தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் பக்தர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் கூறுகையில் இந்துக்களின் முக்கிய பண்டிகை நாளான இன்று கோவிலில் வழிபாடு நடத்தவும் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்யவும் கொரோனாவை காரணம் காட்டி மறுத்துவிட்டனர்.

அந்த தடையை மீறி தாங்கள் கோவிலில் நுழைந்து பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்ததாகவும், தங்களால் தான் கொரோனா பரவும் என்றால் டாஸ்மாக் மது கடைகள், தேவாலயங்களில் மட்டும் கூட்டம் சேர அரசு ஏன் அனுமதிக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் மேனகாவிடம் கேட்ட போது நடந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சனையைக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...