மதுக்கரையில் 'என்னை காதலிச்சிட்டு இப்படி ஏன் பண்ணின?' பெண்ணின் போட்டோவை மார்ப்பிங் செய்த காதலன்.!!

மதுக்கரை அருகே திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் போட்டோக்களை சித்தரித்து வெளியிட்ட காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: மதுக்கரை அருகே திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் போட்டோக்களை சித்தரித்து வெளியிட்ட காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் ஜமால் முகமது. இவரது 21 வயதான மகளான சுல்தானா பர்வீன் என்வருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால், இரு குடும்பத்தாருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, யூசுப் அலி, நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து தொல்லை செய்து வந்ததால், சுல்தானா பர்வீன்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காவல் நிலையத்தில், புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சுல்தானா பர்வீன் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் யூசுப் அலியின் நண்பர், ஷ்யாம் என்பவர்யூசுப் அலியிடம், சுல்தானாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, யூசுப் அலி அவரிடம் இருந்த சல்த்தானாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து, பெண் பார்த்து விட்டு சென்ற மணமகன் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்.

இதுபற்றி அவர்கள், பெண்ணின் குடும்பத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர் .இதையடுத்து, சுல்தானா பர்வீன், தற்போது மதுக்கரை காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் யூசுப் அலி மற்றும் ஷியாம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...