வால்பாறையில் 5-நாளுக்கு பிறகு எம்.பி பேச்சுவார்த்தை மூலம் ஆதிவாசி மக்கள் போராட்டம் வாபஸ்.!!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லாறு ஆதிவாசி மக்கள் 5-வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 5-நாளுக்கு பிறகு எம்.பி பேச்சுவார்த்தை மூலம் ஆதிவாசி மக்கள் போராட்டத்தை நிறுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லாறு ஆதிவாசி மக்கள் 5-வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 5-நாளுக்கு பிறகு எம்.பி பேச்சுவார்த்தை மூலம் ஆதிவாசி மக்கள் போராட்டத்தை நிறுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லாறு ஆதிவாசி மக்கள் 5-வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் 6 மாதத்திற்குள் இடம் வழங்கப்படும்.

ஆதிவாசி பழங்குடி மக்கள் போராட்டத்தை நிறுத்தினர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லாறு ஆதிவாசி பழங்குடி கிராமத்தில் சுமார் இருபத்தி மூன்று குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிக கன மழை பெய்து வனப் பகுதியில் நிலச்சரிவு மரங்கள் சரிந்து விழுந்து பாதிக்கப்பட்டது. இதில் கல்லார் ஆதிவாசி பழங்குடியினர் கிராமமும் பாதிக்கப்பட்டது. அங்கு வாழ முடியாமல் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்படும் என்று பயந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

மேலும் அதிக கன மழை பெய்து வந்ததால் அங்கு தங்க முடியாமல் வனப்பகுதியில் பாதுகாப்பான இடத்தில் குடிசைகள் அமைத்துத் தங்கினர். அதை சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறி வனத்துறையினர் குடிசைகளை அப்புறப்படுத்தி மாவட்ட ஆட்சியரின் மற்றும் சார் ஆட்சியர் வன அலுவலர்கள் 23 குடும்பங்களை தாய்முடி எஸ்டேட் தோட்ட குடியிருப்பில் தங்க வைத்தனர்.

கடந்த 3-ஆண்டுகளாக எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்து வாழ்ந்து வந்தனர். ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க தெப்பக்குளம் மேடு என்ற பகுதியை இடம் தேர்வு செய்யப்பட்டது.

தற்போதுவரை அங்கு இடம் அவர்களுக்கு வழங்காததைக் கண்டித்தும் கடந்த 3-ஆண்டுகளாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் தங்க வைத்திருப்பதாகவும் ஆதிவாசி பழங்குடியின மக்களின் கலாச்சாரமும் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகவும் கூறி தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் ஒதுக்கி தர தெப்பக்குளம் மேடு வனப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே சுபம் நான தேவ் ராவ் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் ஆகியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பயன் இல்லாததால் போராட்டம் தொடர்ந்து நடந்தது.



5-வது நாளாக இன்று வன பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்தைப் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் கல இயக்குனர் கணேசன் மற்றும் வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் திமுக பொறுப்பாளர் பால்பாண்டி நகரமன்ற தலைவர் கோழி கடை கணேசன் மற்றும் அன்பழகன் மாணிக்கம் கருப்பையா சேபிர் மற்றும் அனைத்து கட்சினர் தெப்பக்குளம் மேடு பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆதிவாசி பழங்குடி மக்கள் தலைவர்கள் நாராயணன் ராஜலட்சுமி அனிஷ் ஆகியோரிடம் பேச்சுவர்தை நடத்தினர்.



பாராளுமன்ற உறுப்பினர் 6 மாதத்திற்குள் தெப்பக்குளம் மேடு பகுதியில் உங்களுக்கு இடம் வழங்க தமிழக அரசிடம் கூறி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து பாராளுமன்றத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் கொரோனா காலத்தில் அனைத்து வேலைகளும் தடை பட்டு உள்ளது தற்போது தமிழக அரசு உங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தரும் என்று கூறினார் ஆதிவாசி மக்கள் தற்போது தெப்பக்குளம் மேட்டில் போடப்பட்டு உள்ள கொட்டகையை அகற்றமாட்டோம் மேலும் பெண்கள் தனிமையில் இருக்க மேலும் ஒரு சில குடிசைகள் அமைக்கக் கோரிக்கை வைத்தனர்.



அந்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்று கொண்டனர். இதனால் ஆதிவாசி பழங்குடி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை கை விட்டு பாராளுமன்ற உறுப்பினர் பழங்குடி மக்களுக்குப் பொன் ஆடை போர்த்தி உணவு பொருட்கள் வழங்கி போராட்டத்தை நிறைவு செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...