கோவையில் மது போதையில் கூலி தொழிலாளியை கடுமையாக தாக்கிய சிறுவன் உட்பட 7 பேர் கைது..!

விசாரணையில் அவர்கள் மதுவிற்கு அடிமையாகி இதுபோன்ற பல்வேறு அடிதடி பிரச்சனைகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் மது போதையில் கூலி தொழிலாளியை கடுமையாக தாக்கிய சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று, வேலையை முடித்து விட்டு வேலை பார்க்கும் கட்டிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த போது, இளைஞர்கள் சிலர் அந்த கட்டிடத்திற்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதைப் பார்த்த அண்ணாதுரை, வேலை நடந்துவரும் கட்டிடத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த இளைஞர்கள், அண்ணாதுரையை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அண்ணாதுரை முதலுதவி சிகிச்சைக்குப்பின் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் விஷ்னு, இளவரசன், அபிஷேக், சந்தோஷ், அபுதாஹிர், முருகன் என தெரிய வந்துள்ளது.

மேலும், இவர்கள். மதுவிற்கு அடிமையாகி இதுபோன்ற பல்வேறு அடிதடி பிரச்சினைகள் மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று அண்ணாதுரையை தாக்கியதை, அவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...