கோவையில் அரசு பள்ளி வளாகத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..!

தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் அரசு பள்ளி வளாகத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை வழக்கம் போல மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர்.

அப்போது, பள்ளி வளாகத்தில் உள்ள ஜன்னல் கம்பியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், உடனடியாக சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். வாலிபரின் உடலை மீட்டு விசாரணை செய்தனர்.

விசாரணையில் பள்ளி வளாகத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நபர் தேனி மாவட்டம் உஞ்சம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (45) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஒருவரிடம் வேலை கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒருவாரம் கழித்து கூப்பிடுகிறேன் வா என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, ரமேஷ் வீட்டிற்குச் செல்லாமல் நேராக சூலூருக்கு வந்துள்ளார். பின்னர், பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த அவர், சூலூர் பள்ளியின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால், அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை.

இதனை தொடர்ந்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரயிலில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...