கோவையில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருட்டு..! போலீசார் விசாரணை

துணிக்கடைக்கு சென்ற சமயத்தில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப்பை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை லட்சுமி மில் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப்பை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் நிஷாந்த் கிருஷ்ணா (37). இவர் கீரணத்தம் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள துணிக்கடை முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அந்த சமயத்தில் காரின் முன்பக்க சீட்டில் தனது லேப்டாப்பை வைத்திருந்தார்.

பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த பொழுது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளே இருந்த லேப்டாப் காணாமல் போயிருந்தது.

இதையடுத்து, நிஷாந்த் கிருஷ்ணா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...