கோவை கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலனுடன் மனைவி சென்ற விரக்தியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை..!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூர் பகுதியில் கள்ளக்காதலனுடன் மனைவி சென்றதால், விரக்தி அடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்தூர் இந்திரா காலனி பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (37). லாரி ஓட்டுநரான இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஜனனி, அர்ச்சனா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், மணிகண்டனின் மனைவி பத்மாவதியும் அதே பகுதியில் வசித்து வந்த பார்த்திபன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பத்மாவதி கள்ளக் காதலனான பார்த்திபனுடன் சென்றுவிட்டார். மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் மன விரக்தியில் இருந்த கணவன் மணிகண்டன், நேற்று இரவு அவரது மகள்களை பொள்ளாச்சி வஞ்சியபுரம் பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் நெ.10 முத்தூர் பகுதியிலுள்ள வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை வெகுநேரமாகியும் மணிகண்டன் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மணிகண்டனின் அண்ணன் ரங்கசாமி உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது

இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த தற்கொலை குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...