கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் - இருவருக்கு கத்திக்குத்து..!!

புகாரின் பேரில் கோவை சின்னவேடம்பட்டி சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கோவை சின்னவேடம்பட்டி, ராமர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (26). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன், சின்னவேடம்பட்டியிலுள்ள ஒரு பேக்கரியில் நண்பர் அசோக்குடன் அரவிந்த் பேசி கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரவிந்த் மற்றும் அவரது நண்பரிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் அரவிந்த் மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் (25) ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் சின்னவேடம்பட்டியை சேர்ந்த மாசி, சிவா, சூர்யபிரகாஷ், மணி, அரவிந்த் மற்றும் அசோக் ஆகிய ஆறு பேர் மீது தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...