உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 27 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொறுத்தும் பணி தீவிரம்..!

கோவை மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக 128 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும். தேர்தலில், 77 ஆயிரம் வாக்காளர்கள் வாக்குகளைச் செலுத்தவுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்படவுள்ள 128 வாக்குச்சாவடி மையங்களில், 27 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாக்குச்சாவடிகளில், வெப் கேமிரா பொறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கையில்,

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, 128 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் 77 ஆயிரம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்கின்றனர். வாக்கச்சீட்டைப் பயன்படுத்தி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுடன் கூடிய வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விட்டன.

வெப் கேமராக்கள் மற்றும் அடிப்படை வசதிகள்

இதில், 27 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக சீல், வாக்குச்சீட்டுகள், வாக்குச்சீட்டுகள், அழியாத மை, ரப்பர், பொதுமக்களுக்கு வழங்க கையுறை, ஊழியர்கள் பயன்படுத்த முகக்கவசம், உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட பொருட்கள் தயாராக உள்ளன.

இந்த பொருட்கள் அனைத்தும், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு 8-ம் தேதி மாலை அனுப்பி வைக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். வேட்பாளர்கள் அனைவரும் தங்களது பிரச்சாரத்தை 7-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் பிரஇ பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...