வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு: கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.!!

உரிய பயனாளிகளுக்குப் பட்டா வழங்காமல் முறைகேடாகப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி காரமடை பகுதி பொதுமக்கள் கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


கோவை: உரிய பயனாளிகளுக்குப் பட்டா வழங்காமல் முறைகேடாகப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி காரமடை பகுதி பொதுமக்கள் கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை எத்தப்ப நகரில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் 91-பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.



இதில் ஏற்கனவே இலவச வீட்டு மனை பட்டா பெற்றவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இலவச பட்டா பெறப் பணம் பெறப்பட்டதாகவும் தனி நபர் மூலம் பட்டாக்கள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். 58-பேர்களின் பட்டாக்களை சுரேஷ் என்ற தனி நபர் ஏமாற்றி பயனாளிகள் அல்லாதவர்களுக்குக் கொடுத்து உள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 12-முறை மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்றனர். மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக முதல்வர் உள்ளிட்டவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது வடக்கு வருவாய் வட்டாட்சியர் தலைமையில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்பட்டு உரிய பயனாளிகளுக்குப் பட்டா வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளதாகவும் தகுதியற்றவர்களின் பட்டாக்கள் நிராகரிக்கப்படும் என கெரிவித்தனர்.

பணம் பெற்று கொண்டு பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளதாக மனுவில் கூறப்பட்டு உள்ளது குறித்து கேட்டபோது, உண்மை நிலவரத்தை அறியாமல் பிரச்சனையைத் திசை திருப்பும் நோக்கில் மனுவில் குறிப்பிடபட்டுள்ளதாக கூறியவர்கள் தகுதி உள்ள அனைவருக்கும் பட்டா கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...