பொள்ளாச்சி அருகே ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!

சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கவியருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் சிற்றோடைகள் உருவாகி வெள்ளப்பெருக்கினால் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவியில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து குளிப்பது வழக்கம்.



அந்த வகையில், இன்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கனமழை பொழிந்தது. இதனால் வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகளை அருவி பகுதியில் இருந்து வெளியேற்றினர். வெளியேற்றிய சிறிது நேரத்தில் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், தொடர் கனமழையால் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...