கோவையில் 20 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதான தலைமை ஆசிரியைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்வு..!

அதேசமயம், வாய்தாவின் போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.


கோவை: கோவையில் 20 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதான தலைமை ஆசிரியைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்பட்டது.

கோவை கணபதியைச் சேர்ந்தவர் மாலதி (52) பொன்னே கவுண்டன் புதூரிலுள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.

இந்நிலையில், மகள் திருமணத்திற்காக அதே பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் குமாரிடம், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், எஸ்.பி., ஆபிசில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிலையில், நிபந்தனை தளர்த்த, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டது. மேலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வாய்தாவின் போது தவறாமல் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...