கோவை மக்களே உஷார்..! கொரோனா கிருமிநாசினி அடிப்பதாக கூறி ரூ.65 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்கள்..!

கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் 90 வயது முதியவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டு சமையல் அறைக்குள் சென்ற சமயத்தில் ரூ. 60 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.


கோவை: கோவையில் கொசு மருந்து அடிக்க வந்துள்ளதாக கூறி ரூ.65 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (90) நேற்று மதியம் இவர் வீட்டில் இருந்தார்.

அப்போது 30 மற்றும் 35 வயதுடைய இருவர் கொரோனா கிருமிநாசினி அடிக்க வந்துள்ளதாக கூறி, முதியவரிடம் ஆதார் கார்டு விபரங்களை கேட்டனர். முதியவர் பீரோவிலிருந்து ஆதார் கார்டை எடுத்துக் கொடுத்தார்.

அப்போது, ஒருவர் தண்ணீர் கேட்டதால், முதியவர் சமையலறைக்கு சென்றுள்ளார். தண்ணீருடன் வந்தபோது, இருவரையும் காணவில்லை. மேலும், 65 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த பர்ஸையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இதுகுறித்து அருகே வசிப்போர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...