கோவை மேட்டுப்பாளையம் பத்தரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் பழமை வாய்ந்த வாகை மரம் விழுந்தது..!

சாலையில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பத்தரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் பழமை வாய்ந்த வாகை மரம் முறிந்து சாலையில் விழுந்தது.

மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நெல்லிதுறை ரோடு பத்தரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள பழமைவாய்ந்த ராட்சச வாகை மரம் ஒன்று நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் முறிந்து சாலையில் விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது மற்றும் ராஜா முஹம்மது ஆகியோர் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சாரதா டெர்ரி புராடக்டஸ் நிறுவனத்தின் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் 4 மணி நேரம் போராடி சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

நெல்லிதுறை ரோடு பகுதியில் உள்ள இந்த மரம் எந்த நேரத்திலும் முறிந்து விழுந்துவிடும் என்றும் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் முறிந்து சாலையில் எந்த நேரத்திலும் விழுந்து விடும் என்று நெடுஞ்சாலைத் துறையிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இரவு நேரத்தில் மரம் முறிந்து விழுந்ததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. பகல் நேரத்தில் விழுந்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டிருக்கும் குறிப்பாக பத்தரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளதாலும், அருகிலே தொழிற்சாலை உள்ளதாலும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும்.

எனவே, உடனடியாக நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் இது போன்ற மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

2 மாதங்கள் முன்பு மழைக்காலங்களில் மரம் முறிந்து விழுந்ததில் காரமடை மற்றும் சிறுமுகை பகுதியில் இரண்டு பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...