மசினகுடியில் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் 12வது நாளாக இன்று நான்கு இடங்களில் பரன்கள் அமைத்து புலியின் நடமாட்டம் கண்காணிப்பு..!!

நான்கு பரன்களில் 4 வன கால்நடை மருத்துவர்களை கொண்டு மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு முதன்மை உயிரின வன பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.



நீலகிரி: மசினகுடி T23 புலியை பிடிக்கும் பணியில் 12வது நாளாக இன்று நான்கு இடங்களில் பரன்கள் அமைத்து புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதன்மை உயிரின வன பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

இது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடலூர் தேவன் எஸ்டேட், மேபீல்டு, சிங்காரா பகுதியில் 4 நபர்களையும், 40க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்ற T23 புலியை பிடிக்கும் பணி தொடர்ந்து 12வது நாளாக நடைபெற்ற வருவதாகவும், T23 புலியை பிடிக்கும் பணியில் ஈடுபடும் வன ஊழியர்கள் மற்றும் புலியின் பாதுகாப்பு உறுதி செய்த பிறகு புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இந்த புலி முதிர்ச்சியின் காரணமாக கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கி வருவதாகவும், வேட்டை தடுப்பு பழங்குடியினர்கள் ஆலோசனையின் படி புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், T23 புலி பிடிபட்டவுடன் கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு 12,500 லிருந்து 15,000 சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மனித-வன விலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில், மக்களை அச்சுறுத்தி இடையூறு செய்யும் வனவிலங்குகளை கண்டு அரிந்து ரேடியோ காலரிங் மூலம் மற்றும் வன ஊழியர்கள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வயது முதிர்வு காரணமாக வேட்டையாடும் திறனை இழந்ததால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளை தாக்குவதாகவும், புது யுக்திகளை கையாண்டு t23 புலி பிடிக்கப்படும் என தமிழ்நாடு முதன்மை உயிரின வன பாதுகாவலர் உறுதியளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...