கோவை கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி நாசம் - விவசாயிகள் வேதனை..!!

ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தக்காளி சாகுபடி செய்து வந்த நிலையில், தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதிகளில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக தக்காளி சாகுபடி அதிகளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி செடிகள் அழுகி நாசமானது.



மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி அனைத்தும் செடிகளிலேயே அழுகி வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தக்காளி சாகுபடி செய்து வந்த நிலையில், தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதனிடையே, தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கிணத்துக்கடவு சந்தைகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 30 ரூபாய் வரை வியாபாரிகள் ஏலம் எடுத்ததால் கடைகளில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...