வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதனால் தான் இங்கு போராட்டம் நடைபெறவில்லை - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

வார இறுதியில் வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து, பாஜக சார்பில் வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறப் போராட்டம் நடைபெறும்.


கோவை: கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு அமைப்புகளில் இருந்து, பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில், மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தங்களை பாஜக.,வில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தில் நடந்தது ஒரு துயர சம்பவம். அதற்கு காரணம் யாராக இருந்தாலும், என்ன காரணமாக இருந்தாலும், விட மாட்டோம் என்றும் அந்த காரை ஓட்டியவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அரசு வேலை, இழப்பீடு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரும் உத்தரப்பிரதேசம் அரசு, நிச்சயமாக எந்த தரப்புக்கும், பாதிக்காதவாறு முடிவு எடுக்கும்.

வேளாண் சட்டம் யாருக்கு எதிரான சட்டம் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக, தமிழகத்தில் இதுவரை எந்த விவசாயியும் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே ஒப்பந்த முறையில் தான் இது உள்ளது. முட்டை, கோழி உள்ளிட்டவை ஒப்பந்த அடிப்படையில் தான் வாங்கி வருகிறோம். வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். விவசாய சட்டங்களில், என்ன பாதிப்பு என குறிப்பிட்டுச் சொன்னால், அதை மாற்ற அரசு தயராக உள்ளது.

இத்தனை ஆண்டுகளாக நன்றாகச் சென்று கொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலை, சர்வதேச தரத்தில் அனைத்து பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றி வரும் நிலையில், எந்த பிரச்னையும் இல்லாதபோது, இப்போது பிரச்சினை கிளப்புவது அரசியல் காரணங்களுக்காக தான்.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், மேலும் அதை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும், என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. இதை தான் 2016 லிருந்து பெட்ரோலிய அமைச்சர் சொல்லி வருகிறார். ஜி.எஸ்.டி., க்குள் கொண்டு வர யோசனை உள்ளது.

டி23 புலி விவகாரத்தைப் பொருத்தவரை அறிவியல் ரீதியாக பிரச்சனையை அணுக வேண்டும். வனத்துறையின் முடிவு சரியானதாக இருக்கும், எனவே அதற்கு நாம் கட்டுப்படுவோம்.

கொரோனா பரவல் காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து, பாஜக சார்பில் வரும் 7ம் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறப்போராட்டம் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர்கள் ரமேஷ் குமார், கிருஷ்ணபிரசாத் நவீன், இளைஞரணி இளங்கோ, மாநில செய்தி தொடர்பாளர் சபரி கிரிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...