கோவை கருமத்தம்பட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்குப் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு காவல்துறையினர் அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கருமத்தம் பட்டி பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் சார்பாகப் பெண்களுக்கு எதிரான மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வும், கொரோனா தீவிரம் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பேரூர், கருமத்தம்பட்டி மற்றும் பொள்ளாச்சி உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் காவல் துறையினர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இன்று (05.10.2021) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குற்றங்களைத் தடுப்பது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போக்சோ, சிசிடிவி கேமரா பொருத்துதல், சாலை விதிகளைப் பின்பற்றுவது பற்றியும், கொரோனா பரவும் தீவிரம் பற்றியும்,மன அழுத்தமா? போதைக்கு அடிமையா? குடும்பப் பிரச்சனையா? கவலை வேண்டாம் உடனே அழைத்திடுங்கள் விடியலை-04222300999 என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தெரிவித்திடக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.