கோவையில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்த 101 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

கோவையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனைச் செய்த 101 கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட வியாபாரியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது.

இந்நிலையில் தான் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இன்று சூலூர் காவல் நிலையப் பகுதியில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக ஆய்வாளர் திமாதையன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர், அவரது குழுவினருடன் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

அப்போது சட்டத்திற்கு விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த சூலூர் அயோத்தியபுரத்தைச் சேர்ந்த 29 வயதான மாரிராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுக்குறித்துசூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்ட போது அவரிடமிருந்து சுமார் 101 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் அவர் அப்பொருட்களை சட்டவிரோதமாக கடைகளுக்கு கொண்டு சென்று விற்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...