கோவையில் நீர் மேலாண்மைக் குறித்த பயிற்சி; மழைநீரின் முக்கியத்துவங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

கோவை புலியகுளத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மழைநீரின் முக்கியத்துவங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோனியர் உயர்நிலைப்பள்ளியில் நீர் மேலாண்மை குறித்தப் பயிற்சியை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தேசிய மாணவர்படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில், விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ்விடத்திலே சேமிக்கப்படவேண்டும் எனவும் நீரின்றி அமையாது உலகு” என்கின்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க இப்பூமியில் அத்தனை ஜீவராசிகளும் பிழைத்திருக்க நீரானது அவசியமானதானது எடுத்துரைத்தனர்.

மேலும் நீரானது பூமிக்கு இயற்கையின் கொடையால் கிடைக்கிறது எனவும் இந்நீரை பாதுகாத்து மக்கள் தம் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதும் தான் நீர் மேலாண்மை என எடுத்துரைத்தனர்.

இதோடு தமிழர்கள் தான் மிகச்சிறப்பான முறையில் நீர் மேலாண்மையினை மேற்கொண்டிருந்தனர் எனவும் வரப்புயர நீருயரும் நீர் உயர்ந்தால் நெல் உயரும் நெல் உணர்ந்தால் குடி உயரும் குடி உயர்ந்தால் கோன் உயர்வான்” என்று ஒளவையார் கூறியுள்ளார்.

எனவே நீர் மேலாண்மையை நாம் சரியாகப் பேணுகின்ற போது தான் நமது வாழ்வும் விவசாயமும் சிறப்பாக அமையும் இல்லாவிடில் வறட்சியால் விவசாயம் மனித வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும் என மாணவர்களிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். எனவே

இனி ஒரு உலகப் போர் உருவாகுமானால் அது நீருக்கானதாகத் தான் இருக்கும் என சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே நீர்மேலாண்மை தொடர்பாக நாம் அதிக கவனம் செலுத்துவ வேண்டும் என மாணர்களிடையே எடுத்துரைத்தனர்.



மேலும் இந்நேரத்தில் மழைநீர் சேமிப்பு என்றால் என்ன? என்பது குறித்தும் விளக்கப்பட்டது. அதில், நாம் பெய்யும் மழைதண்ணீரைச் சேமித்து, பாதுகாப்பாக பத்திரப்படுத்தி நமக்குத் தேவையானப் போது பயன்படுத்திக் கொள்வதே மழைநீர் அறுவடையாகும். எனவே நமது வீட்டிற்கு மேல் பெய்யும் மழையை அதாவது வீணாகும் மழை நீரை சேமித்தல், பாதுகாத்தல், சுத்தம் செய்து பயன்படுத்துவதே மழைநீர் சேகரிப்பு ஆகும்.

இவ்வாறு மழைநீரைச்சேமிக்கும் போது, இன்று தரமான, சுத்தமான தண்ணீர் நமது அன்றாட பயன்பாட்டிற்குக் கிடைப்பதற்கு வழிவகை செய்யலாம். நம்மிடமுள்ள தண்ணீரிலேயே மழைநீர்தான் மிகவும் சுத்தமானது. தரமானதும் கூட. எனவே இப்படியொரு தரமான நீரை வீணாக்காமல் சேமிப்பது தான் நன்மைப்பயக்கும் என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக நாம் மழைநீரைச்சேமிக்கும் போது, நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று அதிகரிக்கின்றது.மேலும் கிடைக்கும் மழைநீரைப் பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம் என அதன் பயன்களை எடுத்துரைத்தனர்.

இதோடு மழைநீர் சேமிப்பால் வெள்ள சேதம் குறையும், மற்றும் மேல் மண் அடித்து செல்வதும் தடுக்கப்படுகிறது என்பது போன்ற கருத்துக்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



மேலும் மாணவர்களிடம் விவசாயத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வாழை மரக்கன்றுகளை எப்படி வளர்ப்பது என்று பயிற்சி கொடுக்கப்பட்டு வாழைமரம் கன்றுகளும் நடப்பட்டது.



மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்த பயிற்சி நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.அமலோற்பவ மேரி மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்துக்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...