கிணத்துக்கடவில் இறுதிச்சடங்கு செய்ய சென்றவர்கள் மீது தேனீக்கள் கொட்டி சிகிச்சை பெற்று வந்தவர் பலி.!!

தேன் கூட்டை அகற்றக்கோரி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை தேன்கூட்டைக் கலைப்பதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை மீண்டும் உயிர்ப்பலி ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.


கோவை: கிணத்துக்கடவு அருகே இறுதிச்சடங்கு செய்யச் சென்றவர்கள் மீது தேனீக்கள் கூட்டம் கொட்டி சிகிச்சை பெற்று வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி கடந்த சனிக்கிழமை உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் கோதவாடி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று அங்கு உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கும் போது, திடீரென மாயணம் அருகே உள்ள ஆலமரத்தின் ராட்சத தேன்கூடு திடீரென கலைந்து சுடுகாட்டில் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவந்த அனைவரையும் துரத்தியது.

இதில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தேனீக்கள் கொட்டப்பட்டுக் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தனர். பின்னர் மருத்துவச் சிகிச்சை பெற்ற நபர்கள் வீட்டுக்குத் திரும்பினார்.



இந்நிலையில் தேனீ கடித்ததாகச் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் ஆலமரத்தில் இருக்கும் தேன் கூட்டை அகற்றக்கோரிக் கோதவாடி ஊராட்சி மன்றம் சார்பில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை தேன்கூட்டைக் கலைப்பதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை மீண்டும் உயிர்ப்பலி ஏற்படும் முன்பு ஆல மரத்தில் உள்ள தேன் கூட்டை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...