கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட வாகன விபத்தில் முதியவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள காளியண்ணன் புதூரைச்சேர்ந்தவர் 58 வயதான ஞானபிரகாசம்.
கூலித்தொழில் செய்து வரும் இவர், வழக்கம் போல பணியை முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது கோவை சாலையைக்கடக்க முயன்றப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஞானபிரகாசம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்து உயிருக்குப்போராடிய அவரை அவ்வழியாக சென்ற இவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் விபத்தில் படுகாயமடைந்த ஞானபிரகாசம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து கிணத்துக்கடவுப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேப்போல புளியம்பட்டி அருகே உள்ள மேடு வலசையை சேர்ந்த 38 வயதான வடிவேல் என்பவர், நேற்று மாலை தனது பைக்கில் பல்லடம் ரோட்டில் சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் மகாலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த வடிவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.