கோவையில் வெல்டிங் கடை உரிமையாளருக்கு சரமாரியாக கத்தி குத்து.!!

கோவை அருகே சுந்தராபுரம் பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ள உரிமையாளருக்கு இன்று மர்ம நபர்கள் 3-பேர் கடைக்கு சென்று சரமாரியாகக் கத்தியால் குத்தி சென்றனர்.


கோவை: கோவை அருகே சுந்தராபுரம் பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ள உரிமையாளருக்கு இன்று மர்ம நபர்கள் 3-பேர் கடைக்கு சென்று சரமாரியாகக் கத்தியால் குத்தி சென்றனர்.

கோவை சுந்தராபுரம் அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பிஜின் 33, அந்த பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

இன்று காலை தனது கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3-பேர் நேராக கடைக்குள் சென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

ரத்த வெள்ளத்தில் பிஜின் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன் 307-பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிஜினை வெட்டியவர்கள் யார்? முன்விரோதம் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...