அதிக வட்டி தருவதாகக் கூறி 4.74 கோடி மோசடி.. கோவை நிதி நிறுவன இயக்குனருக்கு 10 -ஆண்டு சிறை.!!

நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வசூலித்து ரூ.4.73 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டான்பிட் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


கோவை: நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வசூலித்து ரூ.4.73 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டான்பிட் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாணிக்கம்பாளையம் ரோடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செல்லமுத்து வயது 50. இவரது மனைவி பராசக்தி உறவினர்கள் குருசாமி உள்ளிட்ட 6-பேர் கூட்டாகச் சேர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு அன்னை இம்போ டெக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செல்லமுத்து இருந்துள்ளார்.

இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தார். இதனையடுத்து ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். இந்த பணத்தைப் பொதுமக்களுக்குத் திரும்பக் கொடுக்க வில்லை.

இதனால் முதலீடு செய்தவர்கள் இது குறித்துக் கடந்த 2010-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ரூபாய் 4-கோடியே 73-லட்சத்து 94-ஆயிரம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து செல்லமுத்து உள்ளிட்ட 6-பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்தது அடுத்து நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது.

அதன் படி குற்றம்சாட்டப்பட்ட செல்லமுத்துவுக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 4- கோடியே 75-லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையைக் கட்ட தவறினால் மேலும் 2-ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அபராத தொகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் மற்ற 5-பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...