மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டத்தின்‌ மூலம்‌ அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு.!!

கோவை‌ மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ காப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்தும்‌, மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ காப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்தும்‌, மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளார் மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று (05.10.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.41க்குட்பட்ட கணபதி பகுதியிலுள்ள காந்தி மாநகர்‌ நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம்‌, வார்டு எண்‌.1க்குட்பட்ட துடியலூர் நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌,



ஆரம்பச் சுகாதார நிலையங்களில்‌ சிகிச்சை பெறும்‌ காப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்குப் போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, அவர்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌, தாய்‌ சேய்‌ நல பாதுகாப்பு அட்டையில்‌ அதன்‌ விபரங்களைப் பதிவு செய்து பராமரிப்பது, அதனைக் கணினியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌ பணிகள்‌, டாக்டா்‌. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில்‌ கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது, சித்த மருத்துவ பிரிவு மூலம்‌ சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்‌,



தமிழக அரசால்‌ கொண்டுவரப்பட்ட மக்களைத்‌ தேடி மருத்துவ திட்டத்தின்‌ மூலம்‌ சிகிச்சை பெறும்‌ நபர்களின்‌ வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை, மருந்து மாத்திரைகள்‌ வழங்கப்படும்‌ முறைகள்‌ குறித்தும்‌ கேட்டறிந்தார்.



தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.41க்குட்பட்ட வெற்றி விநாயகர்‌ நகரில்‌ ரூ.40 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதியதாக அமைக்கப்பட்டு விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரும்‌ நிலையிலுள்ள சிறுவர்‌ பூங்கா மற்றும்‌ ராஜா நகரில்‌ உள்ள சிறுவர்‌ பூங்கா ஆகியவற்றை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ பூங்காக்களின்‌ உட்பகுதி மற்றும்‌ சுற்றுப்புறத்தினை குப்பைகள்‌ இல்லாமல்‌ தூய்மையாக வைத்திருக்க வேண்டும்‌ என சம்பந்தப்பட்ட அலுவலாகளிடம்‌ தெரிவித்தார்‌.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்‌ பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலார்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...