வால்பாறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட காவல்துறை; போதைப்பொருள் விற்பனை செய்தால் கடும் அபராதம் என எச்சரிக்கை

வால்பாறையில் அதிகளவில் போதைப்பொருள் விற்பனையாவதாக எழும் புகாரினையடுத்து பல்வேறு கடைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள்கள் , ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் மது சில்லிங் வியாபாரத்தைத் தடுத்திட வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறையினர் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் அடங்கிய குழுவினர் வால்பாறை நகரின் மையபகுதியில் உள்ள புது மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று எச்சரிக்கை செய்தனர். மேலும் கொரானா தொற்றை தடுத்திடக் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருத்தல் வேண்டும் என்று கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதோடு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருத்தல் அவசியம் என வற்புறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். இதுப்போன்ற சோதனைகள் வால்பாறை பகுதியில் அடிக்கடி நடைபெறும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...