தமிழக முதல்வர் இந்தியாவில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினாலும் நீட் நேர்வு ரத்து செய்யமுடியாது- வானதி சீனிவாசன்

தமிழக முதல்வர் இந்தியாவில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனவும், நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என திருப்பூரில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி சாதனைகளை விளக்கி தொடர் ஓவியம் தனியார் மண்டபத்தில் வரையப்பட்டுள்ளது.



இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த அங்கிருந்த பெண்களுடன் கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் பிரதமர் மோடியின் திட்டங்களைப் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் திட்டங்களை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், திருப்பூர் நிப்ட் கல்லூரி மாணவர்கள் 15 பேர் சேர்ந்து சுமார் 60 மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளனர். இந்த ஓவியமானது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் உத்தரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் திருத்தச் சட்டத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால் காங்கிரஸ் கட்சி தனது செத்துப்போன கட்சியை மீண்டும் வளர்த்தெடுக்க முயற்சி எடுத்து வருகிறது.

இதோடு வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் வாழ்க்கை உயர்ந்து விடும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி அதனை தடுக்க முயல்கிறது என குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழக முதல்வர் 12 மாநில முதல்வர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினாலும் நீட் தேர்வைத் தடை செய்ய முடியாது எனவும் நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என கூறினார். குறிப்பாக நீட் தேர்வு குறித்து மாணவர்களை ஏமாற்றாமல் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு திமுக ஆட்சி புரிய வேண்டும் எனவும் தன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மற்றும் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் முதல்வர்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வார்களா? என்பதை அவர் கேட்க வேண்டும் என்று வானதி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...