கோவையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு மான்கொம்பு கடத்த முயன்ற வாலிபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்..!

கோவையில் விமான நிலையத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு மான்கொம்பு கடத்த முயன்ற வாலிபரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு மான்கொம்பு கடத்த முயன்ற வாலிபருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிப்பாராய் (31). இவர் கோவையில் உள்ள கான்கிரீட் கலவை தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று அசாம் செய்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரின் பையை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அதில் மான்கொம்பு இருந்தது.

பின்னர், அவரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதனை அடுத்து, சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவை காட்டுப்பகுதியில் மான் கொம்புகளை பெற்று அசாம் செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...