கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது; ஆட்சியர் சமீரன் நடவடிக்கை!

கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டக் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் தொடந்துக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் கார்த்திக்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமுகை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது குண்டம் பாயும் என கோவை மாவட்டக்காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக் தற்போது சிறையில் உள்ள நிலையில் இவர் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினர் ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து சிறையில் உள்ள கார்த்திகை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...