இனி ராக்கிங் செய்தால் அவ்வளவு தான்... கிணத்துக்கடவில் காவல்துறை எச்சரிக்கை.!!

கிணத்துக்கடவு அக்சயா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மாணவர்களிடையே பேசினர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அக்சயா பொறியியல் கல்லூரியில் இன்று முதலாமாண்டு மாணவர்களுக்கான ராக்கிங் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் ராக்கிங் குறித்த மாணவ மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசியபோது:- கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாகத் தமிழக அரசு கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.



கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரிப்படிப்பு முற்றிலும் பாதிப்பு அடைந்து உள்ளது என்றும், எனவே கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்களை ராக்கிங் செய்ய கூடாது.



பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து கல்லூரியில் சேர்த்து உள்ளனர். ராக்கிங் செய்வதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஏற்பட்டுப் படிப்பு பாதிப்பு ஏற்படும் என்றும், கல்லூரியில் ராக்கிங் யாராவது ஈடுபட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும், ராக்கிங் குறித்து புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மாணவர்களிடையே பேசினர்.



இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிணத்துக்கடவு காவல் நிலைய தலைமைக் காவலர் சுரேஷ், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...