கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தவ்லத் நிஸா தலைமையில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் கடையில் வேலை பார்க்கக்கூடிய சக ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கடை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அன்புவேல் (30). இவர் சிங்காநல்லூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் சக ஊழியர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர். அந்த சமயம் பார்த்து, அந்த ஊழியர் கடையில் பணியாற்றும் 24 வயது இளம் பெண்ணை கடையில் பணியாற்றக் கூடிய மற்றொரு ஊழியர் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதற்கிடையே பெண்ணின் தந்தை மகளை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட அன்புவேல் அவர்களை மிரட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், இது தொடர்பாக கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தவ்லத் நிஸா தலைமையில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.