திருப்பூர் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும்- செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உறுதி!

திருப்பூரில் கொடிக்கொத்த குமரனின் நினைவாக அரசு உத்தரவோடு நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரரான கொடிக்காத்தக் குமரனின் 118வது பிறந்த நாள் விழா இன்று அரசு மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



இந்நிகழ்வில் மாநில செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

மேலும் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ள படி, தமிழகத்தில் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி அவர்களுக்கு உரிய மரியாதையை திமுக அரசு மேற்கொண்டுவருகிறது.

எனவே இதன்படி, திருப்பூரில் கொடிக்காத்தக் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...