கோவையில் போதைப் பொருள் தடுப்பு குறித்த நிகழ்ச்சி..! மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..!!

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை 10 நாடக குழுவை சேர்ந்தவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.


கோவை: கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மீண்டும் ஒரு வருடத்திற்குப் பிறகு இன்று துவங்கியுள்ளது.

கோவை மாவட்ட கலால் துறை சார்பில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்க துவங்கியது.



அதன் ஒரு பகுதியாக, போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் நடத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை 10 நாடக குழுவை சேர்ந்தவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.



இதில் போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு செய்ய உள்ளனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...