16-மாவட்டங்களில் இன்று "மழை வரப்போகுது...!" - குடை எடுத்துட்டு போங்க மக்களே..!

வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கோவை, நீலகிரி, உட்பட 16-மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தகவல்.


கோவை: தமிழகம் முழுதும் 16-மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடற்பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிகக் கன மழை பெய்யும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்கள், அரியலுார், பெரம்பலுார், கடலுார், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் மிகக் கன மழை பெய்யும்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாகக் காணப்படும்.

சில இடங்களில் லேசான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி, 24-மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 10-செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், மணிக்கு 50-கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.

எனவே, 7-ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...